ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லன்னாக நடிக்க போவது யார் தெரியுமா.?

shankar and ramcharan
shankar and ramcharan

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை கையில் வைத்திருக்கும் இயக்குனர் ஷங்கர் இவர் தன்னை விரிவுபடுத்திக் கொள்ள சமீபகாலமாக தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிகளில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது அதை சொன்னபடியே செய்து காட்டும் வகையில் தெலுங்கு மற்றும் ஹிந்தி பக்கம் அடி எடுத்து வைத்துள்ளார்.

ஹிந்தியில் ரன்வீர் கபூரை வைத்து அன்னியன் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் அதற்கு முன்பாக தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சிரஞ்சீவியின் மகன் ராம்சரனை வைத்து புதிய படத்தை எடுக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஏன் சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை போடப்பட்டது.

அப்போது சங்கர், அவரது மகள் அதிதி ஷங்கர், சிரஞ்சீவி, ராம் சரண், இயக்குனர் ராஜமவுலி இவர்கள் இருந்த புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது. தற்போது இந்த படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துவருகிறார்.

மேலும் சில முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி, சுனில் போன்றோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராம் சரண் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியே வந்த நிலையில் தற்போது அந்த நபர் யார் என்று தெரிந்து உள்ளது .

suresh gobi
suresh gobi

மலையாள நடிகர் மற்றும் பாராளுமன்ற எம்பியுமான சுரேஷ்கோபி தான் அந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம் இவர் தமிழில் இதற்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் உருவான ஒரு படத்தில்  டாக்டராக நடித்து அசத்தியவர் தற்போது இந்த திரைப் படத்திலும் அவர் நடிக்க உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.