இந்த வாரம் “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா.? சிம்பு அனுப்பி வைக்கும் முதல் ஆள்.

simbu-
simbu-

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டார் OTT தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப் படுகிறது. இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக உலக நாயகன் கமலஹாசனின் தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் அவருக்கு தொழில் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் அடுத்தடுத்த வேலைகள் இருந்ததன் காரணமாக வேறு வழியில்லாமல் தொகுப்பாளர் பணியில் இருந்து வெளியேறினார் இதனையடுத்து உடனடியாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு என்கின்ற STR தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

இவரது வருகை மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்த வாரம் 7 பேர் நாமினேசன் ஆகினர். தாமரைச்செல்வி, ஜூலி, அபிராமி, தாடி பாலாஜி,அனிதா,சினேகன் மற்றும் சுருதி ஆகியோர்.

இவர்கள் அனைவரும் வீட்டில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பது மற்றும் விளையாட்டிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதால் நாமினேஷன் ஆகி உள்ளனர் இவர்களில் மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கும் நபர் வெளியேற்றப்படுவார் அந்த வகையில் தாடி பாலாஜி மக்கள் மத்தியில் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக அபிராமியும் குறைந்த ஓட்டுகளை வாங்கியுள்ளார் சொல்லப்போனால் டேஞ்சர் சோனில் அபிராமியும், தாடி பாலாஜி மட்டுமே இருக்கின்றனர்.இரண்டு பேர் உங்களில் யாரேனும் ஒருவர் வெளியேற்றப் படுவது உறுதி ஆனால் இதுவரை யாரையும் அதிகார பூர்வமாக நாம் சொல்ல முடியாது.

இந்த வாரம் வெளியேற்றப்படும் நபரை சிம்பு வெளியே அனுப்பி வைப்பார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு அனுப்பி வைக்கும் முதல் நபர் அந்த நபராக இருப்பார்.