தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து வெற்றி தோல்வியை சந்தித்து வருகின்றன ஒரு படம் வெளிவர இயக்குனரும், தயாரிப்பாளரும் பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது என்றால் படத்தில் கமிட் செய்யப்பட்ட நடிகர் நடிகைகள் ஏதோ ஒரு சில காரணங்களால் பாதியிலேயே விலகுவது வழக்கமாக இருந்து வருகிறது அந்தவகையில் படத்தில் பாதி சூட்டிங்கில் இருந்து வெளியேறியவர்கள் உண்டு அந்த வகையில் சில படங்களில் பாதியிலேயே நிறுத்திவிட்டு பிற்பாதியில் வேறு நடிகையை கமிட் செய்து படத்தை எடுத்து முடிக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு சில படங்களில் லிஸ்ட் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளன.
1. பிரண்ட்ஸ் – இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக தேவயானி அவர்கள் நடித்தார் ஆனால் முதலில் ஜோதிகா அவர்கள் கமிட் செய்யப்பட்டு சில காட்சிகள் எடுக்கப்பட்டு பாதியில் விலகினார் ஜோதிகா.
2. ஆடுகளம் – டாப்ஸி கதாபாத்திரத்தில் முதலில் நடித்த நடிகை திரிஷா என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய புகைப்படம் சமூகவலைதளத்தில் சமீபத்தில் வெளிவந்து.இப்படத்தில் சில காட்ச்சிகள் திரிஷா நடித்தார் இருப்பினும் சில காரணங்களை படத்திலிருந்து விலகினார்.
3. தேவர் மகன் -இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது மீனா. இப்படத்தில் சில காட்சிகள் நடித்திருந்த மீனா சில காரணங்களால் படத்திலிருந்து முழுவதும் வெளியேறினார்.
4. திருமலை – படத்தில் ஜோதிகா அவள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் இவருக்கு முன்பாக ஹிந்தி நடிகை namrata shirodkar நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் மகேஷ்பாபுவின் மனைவி ஆவார்.
5. நேருக்கு நேர் – இப்படத்தில் முதலில் தல அஜித் நடித்தார் இருப்பினும் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகினார் இவருக்கு பதிலாக சூர்யா நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. எந்திரன் – இப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்திருந்தார்ஆனால் முதலில் கமலஹாசன் சில காட்சிகள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
7. சந்திரமுகி – ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன்.
8. இரண்டாம் உலகம் – இப்படத்தில் முதலில் தனுஷ் அவர்கள் சில காட்சிகளில் நடித்திருந்தார் இதனையடுத்து ஆர்யா ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9. உன்னை நினைத்து – சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடித்திருந்த நடிகர் விஜய்.
10. மனசெல்லாம் – திரிஷா கதாபாத்திரத்தில் முதலில் நடிகை இருந்தது நடிகை வித்யாபாலன். போன்ற நடிகர்-நடிகைகள் படத்தின் பாதியிலேயே படிப்பு வெளியேறினார்கள் என்பது குறிப்பிடதக்கது.