“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கமலுக்கு பதில் பணியாற்ற போவது யார் தெரியுமா.?

kamal
kamal

விஜய் டிவி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக அமைந்து விட்டால் போதும் அதை அடுத்தடுத்த சீசன் சீசன்னாக எடுத்து அசத்துகிறது. அந்த வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெற்றி கண்டுள்ளன அதில் ஒன்றாக தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியும் இடம் பெற்றுள்ளது.

இதுவரை 5 பிக்பாஸ் நிகழ்ச்சிகள் வெற்றி அடைந்த நிலையில் தற்போது அடுத்ததாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் OTT தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார் ஆனால் தற்போது அவருக்கு அடுத்தடுத்த சினிமா பட வாய்ப்புகள் மற்றும் அரசியல் என அடுத்தடுத்து பிஸியான வேலைகள் அதிகமாக இருப்பதால்..

நடிகர் கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிறிது இடைவெளி எடுப்பார் என்ற தகவல் ஆரம்பத்திலேயே கசிந்தது அதுபோல இந்த வாரத்தை முடித்துவிட்டு அடுத்த வாரம் வேறு யாராவது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் முதலாவதாக ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக சிம்பு இல்லையென்றால்..

சரத்குமார் ஆகிய மூவரில் ஒருவர் இருப்பார் என தெரிய வருகிறது குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது காரணம் எப்போதுமே ரம்யா கிருஷ்ணனுக்கும் வனிதாவுக்கு  ஆகாவே ஆகாது.ஏன் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு மிகப்பெரிய ஒரு பஞ்சாயத்து நடந்தது தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா ரொம்ப ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்களின் கணிப்பாக இருக்கிறது.  ஒரு பக்கம் மக்களை இந்த நிகழ்ச்சியை நன்றாக கவர்ந்து இழுக்க சிம்பு அல்லது சரத்குமாரை அனுக்கும் என ஒருபக்கம் கூறப்படுகிறது.எதுவும் இப்பொழுது நம்பத்தகுந்த தகவல் இல்லை எது வேண்டுமானாலும் நடக்கலாம்.