சின்ன கவுண்டர் – 2 படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா.? அவர் ஒரு வில்லன் தான்.! விஜய் சேதுபதி கிடையாது.

chinna kavundar
chinna kavundar

சினிமாவுலகில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெளிவருகின்றன அதற்கேற்றார் போல இளம் இயக்குனர்களும் புதிய கதைகளுடன் வலம் வருகின்றனர் இருப்பினும் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கின்றனர் அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பார்ட்-2 திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை பெற்றுள்ளன.

அந்த நிலையில் தற்போது 30 வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர். அந்தப் படம் வேறு எதுவும் அல்லவிஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் தான். இத்திரைப்படத்தை உதயகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் 100 நாட்களை தாண்டி ஓடியது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் இசை ஆகியவை படத்திற்கு வலுசேர்த்தன இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த நிலையில் சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தை இயக்குனர் உதயகுமார் சின்னக்கவுண்டர் படத்தையும் இயக்க உள்ளார்.

கதையையும் எழுதி உள்ளார் நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் இந்த படத்திற்கு முதலாவதாக நடிகர் விஜய் சேதுபதியிடம் உதயகுமார் கேட்டுள்ளார் ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனை அடுத்து  தயாரிப்பாளரும், நடிகருமான ஆர். கே. சுரேஷிடம் கதையை சொல்ல அவருக்குப் பிடித்துப் போகவே சம்மதம் தெரிவித்துள்ளாராம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்கே சுரேஷ் தாரை தப்பட்டை மற்றும் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் அதேசமயம் ஹீரோவாக பில்லாபாண்டி மற்றும் பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டுள்ளார் இப்பொழுது சின்ன கவுண்டர் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பது நல்லதொரு வெற்றியை பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.