நடிகர் சூர்யா சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக வருகின்ற பத்தாம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம் என அதிரடியாக கூறி உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவின் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க எதிர்நோக்கி இருக்கின்றனர். எதற்கும் துணிந்தவன் திரை படத்தில் சூர்யாவுடன் கை கோர்த்து சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், சூரி மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமெண்ட் என இருப்பதால் படம் ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்து இழுக்கும் என படக்குழு நம்பி உள்ளது. இதுவரை படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவற்றை ரிலீஸ் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருந்தாலும் மறுபக்கம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது.
இந்த நிலையில் ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்கிறார் இவருக்கு படத்தில் யார் குரல் கொடுத்து உள்ளார் என்பதைத்தான் பார்த்தா உள்ளோம்.
அதன்படி பார்க்கையில் அக்ஷயா என்பவர் தான் பிரியங்காஅருள் மோகனுக்கு டப்பிங் பேசியுள்ளார் அதேபோல சின்னத்திரையிலும் பல்வேறு பிரபலங்களுக்கு அவர் டப்பிங் பேசியுள்ளார் அந்த வகையில் ரோஜா, சத்யா, பாண்டியன் ஸ்டோர் உள்பட பல்வேறு சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.