தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர் வினோத் அவர்கள் தல அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் திரைப்படமானது இரண்டு வருட படப்பிடிப்பில் இருந்து தற்போது முடிவடைந்த நிலையில் எப்பொழுது திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த உடன் மீண்டும் தல அஜித் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022ஆம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கமிருக்க தல 62 திரைப்படம் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது அந்த வகையில் தல அஜித் தற்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா தேர்வானது மட்டுமல்லாமல் தல அஜித்திற்கு வில்லனாக பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது.
தல அஜித் ஏற்கனவே மங்காத்தா, வேதாளம் போன்ற திரைப்படத்தில் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் நடித்து இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் அந்தவகையில் இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார் என எதிர்பார்த்த நிலையில் மறுபடியும் நெகட்டிவ் கலந்த ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இவ்வாறு வெளிவந்த தகவலின்படி தல 62 திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மத்தியில் அதிகரித்துள்ளது.