தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் முதல் படம் யாருக்கு வெற்றி தோல்வி தெரியுமா.? முழு விவரம் இதோ.

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் உருவாகியிருந்தாலும் நிலைத்து நிற்கும் நடிகர்கள் பல ஹிட் படங்களை கொடுத்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்க முடியும் அந்த நடிகர்களின் முதல்படம் யாருக்கு வெற்றி தோல்வியை கொடுத்துள்ள என்பதை தற்போது பார்ப்போம்.

  1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் நடித்த திரைப்படம் “அபூர்வ ராகங்கள்” ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் 16 வயதினிலே என்று ஆனால் அவருக்கு முதல் திரைப்படம் இது தான். இந்த படத்தில் ஹீரோ கமல் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

2. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலுக்கு முதல் திரைப்படம் இந்த படத்தில் “அம்மாவும் நீயே” என்ற பாடலை பாடி அசத்தினார். வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

3. தமிழில் அஜித் நடித்த முதல் திரைப்படம் “அமராவதி” இந்த படத்திற்கு பெரிய பலமாக இருந்தது இசை பால பாரதி என்பவர் இசையமைத்திருந்தார். படம் வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்றது.

4. திரைஉலகில் ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகராக என திட்டிய ரசிகர்களுக்கு தற்போது மிகப் பெரிய நட்சத்திரமாக மாறி உள்ளவர் தனுஷ். அவர் முதலில் நடித்த திரைப்படம் “துள்ளுவதோ இளமை” இந்த திரைப்படம் அவரது அண்ணன் இயக்கியிருந்தார். படம் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது.

5. சிவாஜியை தொடர்ந்து அவரது மகன் பிரபு நடித்த முதல் திரைப்படம் “சங்கிலி” இந்த படத்திலும் அவரது அப்பா சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீபிரியா நடித்தனர் இந்தப்படம் வெளிவந்த சுமாரான வெற்றியை பெற்றது.

6. விஜயகாந்த் முதன் முதலில் நடித்த திரைப்படம் “இனிக்கும் இளமை” இந்த படத்தில் சுதாகர், ராதிகா போன்ற பல ஜாம்பவான்கள் நடித்திருந்தனர் படம் வெளிவந்து சுமாராகவே ஓடியது.

7. ரவி நடித்த முதல் திரைப்படம் “ஜெயம்” இந்த படம் இவருக்கு பெயரையும் புகழையும் சம்பாதித்தது இந்த திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கியிருந்தார்.

8. அர்ஜுன் நடித்த முதல் திரைப்படம் “நன்றி” இந்த திரைப்படத்தில் கார்த்தி. நளினி போன்றோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளிவந்து சுமாரான வெற்றியை ருசித்தது.

9. விக்ரம் நடித்த முதல் திரைப்படம் “என் காதல் கண்மணி” இது அவருக்கு முதல் படம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் படம் வெளிவந்து தோல்வியைத் தழுவியது.

10. நடிகர் சூர்யாவின் முதல் திரைப்படம் “நேருக்கு நேர்” இந்த படத்தை வசந்த் இயக்கியிருந்தார் இவர்களுடன் இணைந்து விஜய் சிம்ரன் மற்றும் பல நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது மேலும் நன்றாக ஓடியது.

11. விஜய் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு. இதற்கு முன்னால் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான  வெற்றி படத்தில் நடித்தார். விஜயின் நாளைய தீர்ப்பு படம் ஓட வில்லை.