90 காலகட்டங்களில் ரசிகர்களின் பேவரைட் நடிகையான ரஞ்சிதா சினிமா உலகை விட்டு ஓட காரணம் யார் தெரியுமா.? அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்.

ranjitha
ranjitha

90 காலகட்டங்களில் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது பெயரை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் நடிகை ரஞ்சிதா. இவ்வாறு ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள்  படங்களில் எடுத்தவுடனேயே நடிக்க ஆரம்பித்ததால் வேறு வழியில்லாமல் கவர்ச்சியையும் காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

ஆம் கிளாமரான சீன், பாடல்கள் வந்தால் அதில் தயங்காமல் நடித்து அசதினார். இதனால் அவருக்கு ரசிகர்களும் கிடுகிடுவென உயர ஆரம்பித்தனர். நடிகை ரஞ்சிதா முதலில் நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தில் நடித்து முதலில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார்.

அதன் பின் நடிகை ரஞ்சிதா பொண்டாட்டி ராஜ்ஜியம், பேண்ட் மாஸ்டர், கேப்டன், ஜெய்ஹிந்த்,போன்ற பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடித்தவர் அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில்  கெஸ்ட் ரோல், ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் ஒரு கட்டத்தில் சாமியார் நித்யானந்தாவிடம் சரண் அடைந்து அங்கேயே இருந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரஞ்சிதா அர்ஜுனுடன் இணைந்து கர்ணன் படத்தில் நடித்து இருந்தார் அப்போது அர்ஜுன் தனக்கு உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார் வேறு வழி இல்லாததால் தான் சினிமாவை விட்டு ஓடி வந்ததாக கூறி உள்ளார். இதனை நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் மறுத்துள்ளார் நடிகர் அர்ஜுன் நடிகை ஒப்புதல் இல்லாமல் தொட மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய பயில்வான் ரங்கநாதன் அருகிலிருந்த ரஞ்சிதாவிடம் நீங்கள் நடித்த நாடோடி தென்றல் படத்தின் போது சாமியார் நித்தியானந்தா உங்கள் மீது ஈர்ப்பு இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதைக் கேட்டதும் உணர்ந்து கொண்ட ரஞ்சிதா நீங்கள் எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப் போகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிந்தது அவர் என்னிடம் வந்து கூறும்போது நான் உனது கடவுள் என்றால் அதிலிருந்து நான் அமைதியாகி அவரது சிஷ்யையாக அவருக்கு பல பணிகளை செய்து வருகிறேன் என கூறினார் நடிகை ரஞ்சிதா.