சின்னத்திரை சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக வலம் வரும் பாரதி கண்ணம்மா மக்கள் பலரின் ஃபேவரட் சீரியல் ஆகும். தற்போது இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் டிஆர்பி லும் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கும் தொடராகும்.
அந்த வகையில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் சில வருடங்களாக இயக்கி வருகிறார். இந்த சீரியலில் கோர்ட்டின் உத்தரவினால் பாரதிகண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் வெண்பாவின் திட்டத்தினால் பாரதி தற்போது கண்ணம்மா வீட்டில் இருந்து பிரிந்து வெண்பா வீட்டில் தங்க முயற்சித்தார்.
மேலும் கண்ணம்மா இதனை செம பிளான் போட்டு தடுத்து நிறுத்தியுள்ளார். இப்படி தற்போது சீரியலில் சிறப்பாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவி தொடர்ந்து சீரியலை முன்னிலையில் வைத்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷிணி ஹரிப்ரியன் என்ற பிரபலம் நடித்து வந்தார்.
அவர் வேறு சில காரணங்களின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகியதை அடுத்து தற்போது வினுஷா நடித்து வருகிறார். இப்படி இந்த சீரியலில் இருந்து பல பிரபலங்கள் மாறியுள்ள நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் துணை கதாநாயகியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கண்மணி மனோகரனை சில வாரங்களாக இந்த சீரியலில் காண்பிக்கப்படவில்லை.
ஆம் அஞ்சலி தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் மேலும் அவருக்கு பதில் வேறு ஒரு பிரபலமும் இந்த சீரியலில் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகின. இதனிடையே தற்போது அஞ்சலி கதாபாத்திரத்திற்கு நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை அருள் ஜோதி என்ற பிரபலம் இனி பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.