சினிமா உலகை பொறுத்தவரை படங்களில் நடிக்கும்போது நடிகர் நடிகைகள் காதல் வயப்பட்டு ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்கின்றனர் ஆனால் அவர்கள் அனைவருக்கும் அந்த வாழ்க்கை நிம்மதி கொடுத்ததாக என்றால் அது கேள்விக்குறிதான்.
அதிலும் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை வாழ்ந்தாலும் குறிப்பிட்ட நான்கைந்து வருடங்களுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். அவரது ரசிகர்களை பெரிதும் வருத்தமடைய செய்கிறது அந்த லிஸ்டில் தற்பொழுது இணைந்து உள்ளவர்கள்தான் நாக சைதன்யா மற்றும் சமந்தா.
இவர்கள் இருவரும் படங்களில் நடிக்கும் பொழுது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் பல்வேறு படங்களில் நடித்தனர். இவர்கள் இருவரும் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான ஜோடிகளாக பார்க்கப்பட்டனர்.
சிறப்பாக வாழ்ந்து வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நான்கு வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்து பலரையும் வருத்தமடையச் செய்தது. சமந்தா தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி யோசிக்க ஆரம்பித்துள்ளாராம் இனி சினிமாவில் தனது திறமையை காட்ட ரெடியாக இருக்கிறார்.
இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது ஐட்டம் பாடலுக்கு ஆடுவது என தனது ரூட்டை மாற்றி கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் தட்டி தூக்க ரெடியாக இருக்கிறார் சமந்தா. இப்படி இருக்கின்ற நிலையில் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் சமந்தா குறித்து பேசியுள்ளார். அவரிடமும் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது உங்களுக்கு பொருத்தமான நடிகை யார் என கேட்டனர் அதற்கு நாகசைதன்யா எனக்கு பொருத்தமான நடிகை சமந்தா கூறினார்