ஒரு திரைப்படம் நன்றாக எடுக்க வேண்டும் என்றால் அந்த திரைப்படத்தில் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் குறிப்பாக சண்டைக் காட்சிகள் கனகச்சிதமாக இருந்தால்தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை அந்த திரைப்படம் பெரும்.
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தங்கப்பழம் என்ற இணை பெயருடன் வலம் வருபவர் தான் ஜாக்குவார் தங்கம் இவர் தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் அனைத்து நடிகர்களுடனும் தனது சிறப்பான சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
ஆம் இவர் ஆறு வயதில் சிலம்பம் பயிற்சி கற்றுக்கொண்டு தன்னுடன் போட்டி போட ஆள் இல்லை என்ற அளவிற்கு சிலம்பத்தில் அதிக ஈடுபாடுடன் கற்றுக்கொண்டு கிட்ட தட்ட 1000 படங்களுக்கு மேல் சண்டை இயக்குனராக பணிபுரிந்து பல கோல்ட் மெடல்களை பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில் இவர் தான் எல்லா திரைப்படங்களுக்கும் சண்டை மாஸ்டர் என்ற அளவிற்கு கூட இவர் தனது சண்டை காட்சிகளை இயல்பாக திரைப்படங்களில் காட்டியிருப்பார் மேலும் எம்ஜிஆர் கண்ட எடுத்தவர் என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை கற்று தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை இவர் 35 நாட்கள் இரவும் பகலுமாக ஓய்வில்லாமல் பணியாற்றியபோது வீட்டில் இருந்து காரில் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் பொழுது இடைவெளியில் காரில் தூங்குவாராம்.
அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3000 தண்டால்களை எடுப்பாராம் இவர் மேலும் நான்கு மாநில விருது சிலம்ப ஆட்டத்திற்க்காக வாங்கியுள்ளார்.இப்படி ஒரு கலைஞன் தமிழ் சினிமா உலகில் அனைத்து நடிகர்களுடனும் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.