விக்ரம் படத்தில் ROLEX.. தளபதி 66 படத்தில் கெஸ்ட் ரோலில் யார் தெரியுமா.? வெளியே கசிந்த தகவல்.!

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தளபதி விஜய் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு தரமான ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து விருந்து படைத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வந்த பீஸ்ட் திரைப்படம்.

மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஒளிபரப்பாகியது. இருந்தாலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்  தற்போது தளபதி விஜய் தனது 66வது திரைப்படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை அதிக பொருட்செலவில் தில் ராஜு  தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் படத்தில் பிரபு, சரத்குமார், ஷாம், யோகி பாபு போன்ற பலரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.  இந்த நிலையில் படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் குறித்த அப்டேட்டை தளபதி ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்ற நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று தளபதி 66 படத்தின் அப்டேட் வெளியிடுவார்கள் என தெரியவருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இணையும் மற்றொரு பிரபலம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது அதன்படி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன  கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.