தோல்வியை காணாத இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா.? கமல் கிடையாது.

lokesh-
lokesh-

அண்மையில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் செய்தி என்னவென்றால் விக்ரம்படம் பற்றிதான். இந்த படம் கமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உருவாக்கியதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஆக்சன் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறியுள்ளார். லோகேஷ் ஆரம்பத்தில் அவரது கல்லூரி நண்பர்களை வைத்து குறும்படம் எடுத்து வந்தார் பின்பு ஒரு கட்டத்தில் சினிமாவில் எடுத்தவுடனேயே..

டாப் நடிகர்களுக்கு கதை கூறி படங்களை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்தப் படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடிக்க இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் தனது கனவு நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றியதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் வெளியான விக்ரம் படம் அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது இதனால் கமல்ஹாசன் பட குழுவில் பணியாற்றிய பலருக்கும் பரிசுகளை வழங்கினார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இருக்கு 80 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் எனக்கு மன்சூர் அலியை மிகவும்பிடிக்கும் என கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்தில் கூட முதலில் மன்சூர் அலியை தான் நடிக்க வைக்க லோகேஷ் முடிவு செய்தார் பின்பு அப்போது அது நடக்க முடியாமல் சென்றது அதனால் அடுத்து லோகேஷ் இயக்க உள்ள படத்தில் மன்சூர் அலியை நடிக்கவைப்பதாகவும் கூறியிருந்தார்.