தமிழ் திரையுலகில் தற்போது ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்து விட்டால் அவர் நிறைய திரைப்படங்களில் நடித்தது போல் பந்தாவாக சுற்றி வருவார் என்பது நமக்குத் தெரிந்தது தான் அந்த வகையில் பார்த்தால் தமிழில் பல நடிகர்கள், நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு நான் நிறைய திரைப்படங்களில் நடித்து உள்ளேன் எனக்கு பட வாய்ப்பு கொடுங்கள் என பாவமாக கேட்டு வருகிறார்கள்.
ஆனால் உண்மையாகவே 80இன் 90இன் காலத்தில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 19 திரைப்படங்கள் குறையாமல் நடித்து வலம் வருபவர் பிரபல நடிகர் யார் அந்த பிரபல நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகர் மோகன் தான் இவர் ஒரு வருடத்திற்கு 19 திரைப்படங்கள் குறையாமல் நடித்து அந்த காலத்திலேயே தனது கெத்தை ரசிகர்களுக்கு காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இவர் விஜயகாந்த் நடிப்பில் ஒரே ஒரு வருடத்தில் 18 படங்கள் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டார் என்று கூட கூறலாம் ஆனால் இவருக்கும் ஒரு படி மேல் இவர் வைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஷாநவாஸ் நசீர் என்ற மலையாள நடிகர் ஒரு வருடத்தில் 40 படங்கள் நடித்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்திய சினிமாவில் ஒரு வருடத்தில் இத்தனை திரைப்படங்கள் நடித்த நடிகர் இவர்தான் என கூறி வருகிறார்கள் மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார் என்றால் தயாரிப்பாளர்களை தொல்லை செய்யவே மாட்டாராம்.
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் இத்தனை திரைப்படங்களில் நடித்தேன் என்று ஆணவத்துடன் யாரிடமும் கூற மாட்டாராம்.இதனையடுத்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது என கேட்டு வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.