தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்களின் மனநிலை எப்படி என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு சிறப்பான கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமை மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்து வருவதோடு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
அதனால்தான் அவர் இன்றும் ஜொலிக்கிறார் மேலும் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து தனது ரசிகர்களுக்கு இப்போது புத்துணர்ச்சி ஊட்டி வருகிறார் கடைசியாக கூட இவர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகி இருந்தது. அதனை தொடர்ந்து தனது 169 மற்றும் 170 படத்திற்கான இயக்குனர்களை தேர்வு செய்து வருகிறார் ஒரு வழியாக தனது அடுத்த படத்திற்கு நெல்சன் திலீப் குமாரை கமிட் செய்து உள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் 170 திரைப்படத்திற்கான இளம் இயக்குனர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து உள்ளாராம் தமிழ் சினிமாவில் காமெடியனாக நடிகராக அறிமுகமாகி .. தற்போது படங்களை இயக்கி வெற்றி கண்டு அருண்ராஜா காமராஜா தான் ரஜினியின் 170 திரைப்படத்திற்கான இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த திரைபடத்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போனி கபூர் ரஜினியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் இந்த படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் இருப்பதோடு மட்டுமல்லாமல் படம் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.