விஜய் 66 வது திரைப்படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா.? கீர்த்திசுரேஷ்.. ராஷ்மிகா மந்தனா.. கிடையாது.? இவங்கதான்.

vijay 66
vijay 66

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வலம் வருகிறார் இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக சாதனை படைக்கின்றனர் அந்த வகையில் கடைசியாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கூட 200 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நெல்சன்னுடன் இணைந்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஒரு வழியாக ஏப்ரல் 13-ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர். இது இப்படியிருக்க விஜய்யோ தனது அடுத்த படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் தெலுங்கு சினிமா பக்கம் முதன் முறையாக கால்தடம் பதிக்க இருக்கிறார். விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதன்பின் ராஷ்மிகா மந்தனா  ஹீரோயின்னாக இருப்பார் என கடந்த வாரம் தகவல்கள் பரவியது. அதோடு மட்டுமல்லாமல் மீண்டும் பூஜா ஹெக்டே இணைந்து விஜயுடன் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நடிகை வேறுயாருமல்ல தனுசுடன் ஜோடி போட்டு பட்டாசு திரைப்படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா இவர் தான். விஜயுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தெலுங்கில் தொடர்ந்து பிரபலமாகியுள்ள நடிகைகளில் ஒருவராக இருப்பதால் விஜயுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.