சின்னத்திரையை தொலைக்காட்சிகள் எப்பொழுதும் புதுவிதமான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுத்து அசத்தி வருகிறது அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசனாக ஒளிபரப்பப்பட்டு மக்களை வெகுவாக கவர்ந்துள்ள நிகழ்ச்சிதான் பிக்பாஸ் தற்போது நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது சீரும் சிறப்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது வழக்கம் போல் உலகநாயகன் கமலஹாசன்.
சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் யார் யார் தப்பு செய்து உள்ளார்கள் என குறைகளை கண்டுபிடித்து சரி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் இப்படி ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் இந்த சீசனில் ஏற்கனவே நமிதா மாரிமுத்து, நாடியாசாங், அபிஷேக், ஆகியவர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரமும் நாமினேஷன் உள்ளதால் போட்டியாளர்கள் தனது திறமையை ஒரு பக்கம் பாஸ் வீட்டில் காட்டி வருகின்றனர்.
ஆனால் மக்கள் யார் யார் சிறந்தவர்கள் நல்லவர்கள் என எண்ணியே அவர்களுக்கு ஓட்டுகளில் போட்டு வருகின்றனர். இந்த நாமினேஷன் லிஸ்டில் தற்பொழுது இசைவானி, சின்ன பொண்ணு, வருண், பிரியங்கா, சுருதி, அபிநய், இமான் அண்ணாச்சி, பவானி ரெட்டி மற்றும் அக்ஷரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களுக்கு தற்பொழுது மக்கள் ஓட்டு போட்டு வருகின்றனர் ஆரம்பத்தில் பிரியங்கா அதிக ஓட்டுகள் வாங்கி முதலிடத்தில் இருந்தாலும் அதன்பின் அக்ஷரா அவரை ஓவர்டேக் செய்து தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். அடுத்த இடத்தை பிரியங்கா தற்போது தக்க வைத்துள்ளார் அடுத்தடுத்து பல பிரபலங்கள் தொடர்ந்து வருகின்றனர்.
கடைசி இடத்தை தற்போது அபிநய் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆக மொத்தம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் அபிநய் என கூறப்படுகிறது ஏனென்றால் அவர்தான் குறைந்த ஓட்டுகள் வாங்கி கடைசி இடத்தை பிடித்திருக்கிறார்.