உலகநாயகன் கமலஹாசன் 80, 90 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக விஸ்வரூபம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிலிருந்து இப்போது வரை இவ்வாறு தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து தான் உள்ளது அதன் காரணமாக நம்பர் ஒன் நடிகராக வலம்வந்தார்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் சினிமாவையும் தாண்டி அரசியல் இப்போது சின்னத்திரையில் தொகுப்பாளர் மற்றும் அமெரிக்காவில் கதராடை நிறுவனம் என தனது ரூட்டை மாற்றி ஓடிக்கொண்டிருக்கிறார் இருப்பினும் அவ்வபோது சிறப்பான கதைகளில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் அண்மையில் கூட ஷங்கருடன் கைகோர்க்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
இந்தப் படத்தின் சூட்டிங் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வந்த இந்நிலையில் எதிர்பாராத விதமாக சில விபத்துகள் ஏற்பட திடீரென நிறுத்தப்பட்டது இதனை அடுத்து இந்த படத்தில் நடித்தார் பலரும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கின்றனர். ஆனால் லைகா நிறுவனம் ஒரு வழியாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தை எடுக்க வேண்டும் என சங்கருக்கும் வேண்டுகோள் விடுத்தது தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.
ஆனால் இந்த படத்தில் நடித்த காஜல் அகர்வால் சில காரணங்களால் வெளியேறினார். இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகரான காமெடி நடிகர் விவேக் இயற்கை எழுதினார் இதனையடுத்து அவரது கதாபாத்திரத்தை யார் நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசித்து இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் என்பவர் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன
விவேக்கின் கதாபாத்திரம் மிக சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரத்தில் இவர் எப்படி நடிக்க போகிறார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் விவேக்கின் திறமை ஈடுகொடுக்க முடியாத ஒன்று என அவரது ரசிகர்கள் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.