நடிகர் தனுஷ் காலத்திற்கு ஏற்ற மாதிரி சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் தனுஷ் ஒரு கட்டத்தில் ஆக்சன் தற்பொழுது வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அது அவருக்கு வெற்றியையும் கொடுத்து உள்ளது அதன் காரணமாகவே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் தமிழை தாண்டி பாலிவுட் ஹாலிவுட் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் உடன் இணைந்து இவர் நடித்த மாறன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருந்தாலும் குடும்ப பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறார். அதிலிருந்து வெளி வந்தாரா இல்லையா என்றால் இன்னும் எதுவும் முழுமையாக முடித்த பாடு இல்லாமல் இருக்கிறது.
இருப்பினும் சினிமா ஷூட்டிங் இருப்பதால் அதில் தற்போது கவனம் செலுத்தி ஓடிக்கொண்டிருக்கிறார் இப்பொழுது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அதற்காக அவர் ஹைதராபாத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் தனுஷ் ஒரு பெண்ணுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பெண் யார் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அந்தப் பெண் வேறு யாருமல்ல தனுஷின் காஸ்டியூம் டிசைனர் தானாம். இருவரும் இணைந்து மதிய உணவை சாப்பிட்டு விட்டு பின் மீண்டும் சூட்டிங்கில் இணைந்தனர் என கூறப்படுகிறது.