நயன்தாராவை போல் அச்சு அசலாக மாறிய பாலிவுட் நடிகை யார் தெரியுமா அது.? இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் புகைப்படம்.!

nayanthara
nayanthara

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவர் பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார்.

இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களுக்கும் இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கோலமாவு கோகிலா இந்த திரைப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் சூப்பர் ஹிட் அடித்தது இந்நிலையில் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்து வருகின்றனர்.

ஹிந்தியில் ரீமேக்காகும் இப்படத்தில் நயன்தாராவாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் இளம் நடிகையான ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.

ஜான்வி கபூர் நயன்தாராவாக அச்சு அசல் மாறி படப்பிடிப்பு தளத்தில் நடித்து வரும் போது எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தில் நயன்தாராவின் கெட்டப்பில் ஜான்வி கபூர் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

janhvi kapoor
janhvi kapoor