நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இப்ப தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்தார். ஆரம்பத்தில் காதல், காமெடி சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வசதி இருந்தாலும் அதே ரூட்டில் பயணிக்காமல் தனது திறமையை வெளிக்காட்.
டும் வகையில் பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் கண்ணேகலைமானே, மனிதன், நிமிர், சைக்கோ ஆகிய படங்களில் நடித்தார் இதில் அவரது நடிப்பு வேற லெவல் இருந்தது. இப்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றது. சினிமாத்துறையில் இப்படியே வெற்றியை நோக்கியே ஓடிக்கொண்டு இருந்தாலும்,அரசியலிலும் தனது திறமையை காட்டி தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக வலம் வருகிறார்.
தொட்ட எல்லாத்தையும் வெற்றியை மட்டுமே ருசித்தவர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தாலும் சினிமாவை விடாமல் அடுத்தடுத்த படங்களிலும் தற்போது கமிட்டாகியுள்ளார். ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் தற்போது தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட இருக்கிறது இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார் இந்த படத்தை அருண் காமராஜ் இயக்குகிறார் இந்த படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வெகுவிரைவிலேயே எடுக்கப்பட உள்ளது இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக உதயநிதி ஸ்டாலின் முடித்துவிட்டு வெளிவரும் பட்சத்தில் அடுத்ததாக மாரிசெல்வராஜ் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின்னுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன அதே போல வில்லனாக பகத் பாசில் மற்றும் அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் களமிறங்குவார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
வில்லனாகவும் ஹீரோவாகவும் வெற்றியை மட்டுமே பெற்று வருவர் பகத் பாசில் எங்கு நடித்தாலும் அந்த படம் பிளாக்பஸ்டர் படமாக இருந்து வந்துள்ளது. உதயநிதி ஸ்டாலினுடன், பகத் பாசில் இணைந்து உள்ளதால் இந்தப் படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.