சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழி படங்களில் தலைகாட்டி உள்ளவர் நடிகை மாளவிகா மோகனன். முதலில் மலையாள சினிமாவில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவர் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்தவர்.
தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் நாளுக்கு நாள் மாளவிகா மோகனன் வளர்ச்சி உயர்ந்து கொண்டே இருக்கிறது தமிழில் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார் இப்பொழுதே நடிப்பிற்கு பெயர் போன தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் OTT தரத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் வேற லெவெலில் எடுத்துள்ளார் இந்த படத்தில் தனுஷ் ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார் இந்த படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தி உள்ளது அதனால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் மாளவிகா மோகனன் பல்வேறு பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
அப்படி ஒரு பேட்டி ஒன்றில் உங்களுக்கு எப்படி மாறன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என கேட்டுள்ளனர். அதற்கு அவர் சொன்னது தான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது நடிகர் தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என கூறினார். இந்த படத்தில் தாரா கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்தால் சரியாக இருக்குமென கார்த்திக் நரேன்னிடம் அவர் தான் பேசியதாக மாளவிகா மோகனன் சொன்னார்.