குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் அஸ்வின். இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக சமையல் செய்து பைனல்ஸ் வரை சென்றுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகின.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஸ்வினுக்கு பின்பு திரைப்பட வாய்ப்புகள் ஒருசில வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் வெள்ளித்திரையில் ” என்ன சொல்ல போகிறாய்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அவருடன் காமெடி நடிகனாக புகழும் இணைந்துள்ளார்.
இந்த படம் சில சர்ச்சைகளை தாண்டி கடந்த பொங்கலன்று திரையரங்கில் ரிலீஸ் ஆனது. மேலும் இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது அதற்கு முக்கிய காரணம் அஸ்வினின் பேச்சுதான் அவர் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்கும்போது நான் தூங்கிவிட்டேன்.
இந்த கதையில் தான் நான் தூங்கவில்லை அதனால் எனக்கு பிடித்த கதையாக இது அமைந்தது என கூறியுள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் வறுத்து எடுத்து உள்ளனர். முதல் படத்திற்கே 40 கதை கேட்டு நடித்துள்ளாரா என கமெண்டுகளில் கிழித்து எறிந்தனர். தற்போது அடுத்ததாக அஸ்வின் பிரபு பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என கேட்டதற்கு அவர் எனது கனவு கன்னி தீபிகா படுகோன் என பதிலளித்துள்ளார். மேலும் அவரது அழகும் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.