குக் வித் கோமாளி சீசன் 2-யை தொடர்ந்து மூன்றாவது சீஸனில் குக் மற்றும் கோமாளி யார் தெரியுமா.?

kuk with comali 3
kuk with comali 3

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் டண்டிங்கான ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இன்றைய உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ஷோ சமயல் போட்டியாக இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியை மட்டும் மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடையும் பலருக்கும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்தவகையில் பவித்ரா, புகழ்,பாலா, சிவாங்கி உட்பட இன்னும் சிலரும் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்கள்.

இந்நிலையில் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது சீசன் 2 நிறைவு பெற உள்ளது எனவே ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் இருந்து வருகிறார்கள். நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் நடுவரான செஃப் தாமு ஒரு பேட்டியில் முக்கியமான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதாவது குக் வித் கோமாளி சீசன் 3 இல் பிக்பாஸ் பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் தான் குக்குகளாக அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் தற்பொழுது உள்ள கோமாளிகள் தான் சீசன் 3 லும் இருப்பார்கள். இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என்று கூறியுள்ளார்.