தமிழ் சினிமாவில் ஒரு நடிகரை மனதில் வைத்து கதை எழுதிய பின் அந்த நடிகர் அப்படத்தில் நடிக்கமால் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து படத்தை ஹிட் அடிக்க வைப்பது தமிழ்சினிமாவில் நடந்து வருகிறது.
அந்த வகையில் 90 காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் குஷி. இத்திரைப்படத்தில் விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகர் தான் நடிக்க இருந்தார் படத்தை அவர் தவற விடவே விஜய் இப்படத்தில் நடித்து தனது இமேஜை உயர்த்திக் கொண்டார் மேலும் அவருக்கு இப்படம் ஒரு சிறப்பு கூடிய படமாக இன்று அளவிலும் இருந்து வருகிறது.
90 காலகட்டங்களில் இளம் இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஜே சூர்யாவும் ஆவார் இவர் தல அஜீத்தை வைத்து வாலி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் எங்கும் பிரபலம் அடையச் செய்தார் இப்படத்தினை தொடர்ந்து அவர் குஷி என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இப்படமும் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
வாலி படத்துக்கு முன்னராகவே குஷி படத்தின் கதையை இயக்குனர் தேர்ந்தெடுத்துயுள்ளார். குஷி படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜிடம் கதை கூறி உள்ளார் ஆனால் குஷி படத்தை எடுப்பதற்கு முன்பாக அஜீத்தை வைத்து வாலி படத்தை எடுத்து முடித்த பின் தான் எடுப்பேன் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார் இதற்கு ஒத்துழைக்காத மனோஜ் குஷி படத்திலிருந்து விலகினார்.
வாலி படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இப்படத்தினை தொடர்ந்து உடனடியாக விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தது அதனை பயன்படுத்தி தான் மீண்டும் குஷி கதையை விஜய்க்கு உள்ளார் கதை விஜய்க்கு பிடித்து போனதால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அப்படிதான் படம் உருவானது குஷி படம். இது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.