சினிமா உலகை பொறுத்த வரை ஒரு நடிகரை கமிட் செய்து சில காட்சிகள் எடுத்த பின் அந்த நடிகர் மற்றும் நடிகைகள் தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகர் நடிகைகளை கமிட் செய்து படத்தை வெற்றி பெறச் செய்வது வழக்கமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவிலும் இதுபோன்று நடந்து வருகின்றன.அஜீத் மற்றும் ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் முகவரி. இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் நல்லதொரு வசூலையும் குவித்தது.
இப்படத்தை துரை அவர்கள் இயக்கியிருந்தார் இதுவே அவரது முதல் படமாகும் இப்படத்தை தொடர்ந்து காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேபாளி போன்ற பல்வேறு சிறப்பு கூறிய படங்களை இயக்கியிருந்தார் இவர் கடைசியாக சுந்தர் சி யை வைத்து இருட்டு என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முகவரி திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியுள்ளன இந்த படத்தை பற்றி பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் துரை.
முகவரி படத்தில் முதலில் கதாநாயகியாகதான் கமிட்டாகி இருந்தார் அவர்களை வைத்துதான் முதல் நான்கு நாட்கள் ஷூட்டிங் ஆரம்பித்து அந்த நான்கு நாட்கள் கழித்துதான்அஜித் ஷூட்டிங் இருந்தது முதல் மூன்று நாள் எடுத்த காட்சிகளை தயாரிப்பாளரிடம் காட்டினேன் பார்த்துவிட்டு நல்லா இருக்கிறது இப்படியே போய் விடலாம் என்று சொன்னார் ஆனால் எனக்கு ஹீரோயின் செட் ஆகாமல் இருப்பது போல் தோன்றியது.
இதைப்பற்றி நான் தயாரிப்பாளர் அவர்களிடம் சொன்னப்போ இப்போ வந்து இப்படி சொல்றியே அப்படியே ஷாக் ஆனார். அவர்கள் நன்றாகத்தான் நடிக்கிறார்கள் ஆனால் இந்த கதையை அவர் சரியில்லாத மாதிரி இருக்கிறது என்று சொல்லி ஜோதிகா நான் தான் கமிட் செய்தேன் ஜோதிகா நடித்த முதல் நாள் சூட்டிங்கை பார்த்துஅசந்து போய் என்னுடைய முடிவு சரிதான் என்று கூறினார்கள்.