கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்னும் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டார் அதில் முதல் பாகம் 500 கோடி பட்ஜெட்டில் ஒரு வழியாக எடுக்கப்பட்டது இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை வெளிவந்தன.
இதில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் சிறப்பாக நடித்திருப்பார் அவரது கதாபாத்திரம் டீசரில் பெரிய அளவில் இருந்தது. பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்ய கரிகாலன் இறந்து விடுவார் என கூறப்படுகிறது ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கல்கி தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்க மாட்டார்.
ஆனால் கதையில் ஆதித்ய கரிகாலன் தான் காதலித்த நந்தினியை பார்க்க கடம்பூரில் இருக்கும் சம்புவரையர் மாளிகைக்கு செல்வார் அப்பொழுது அந்த அறையில் ஒரு பக்கத்தில் வந்திய தேவன் திரு பழுவேட்டையர் ஆகியோர்கள் மறைந்து இருப்பார்கள் மற்றொரு பக்கம் வந்திய தேவனை ஒரு தலையாக காதலித்த காதலி மணிமேகலை இருப்பார்.
நந்தினி கூப்பிட்டதால் ஆதித்ய கரிகாலன் அங்கே போயிருப்பார் ஆனால் நந்தினி அங்கு ஒரு திட்டம் திட்டி இருப்பார் ஆதித்ய கரிகாலனை இங்கு வரவழைத்து கொற்று விட வேண்டும் என்பதற்காக நந்தினி ரவி தாசன் இடும்பன் காரி ஆகியோர்களை ஒரு பக்கத்தில் ஒளிய வைத்திருப்பார். நந்தினி சிக்னல் கொடுத்தால் ஆதித்ய கரிகாலனை கொள்வது போல எல்லா ஏற்பாடுகளும் ரெடியாக இருக்கும்.
நந்தினியும் ஆதித்ய கரிகாலனை சந்தித்தவுடன் மிகப்பெரிய வார்த்தை போர் நடத்துவார்கள் அந்த சமயத்தில் நந்தினி கரிகாலனிடம் உன் கையால் இறந்து போன பாண்டிய மன்னனின் மகள் என்ற உண்மையை உடைப்பார்.
அந்த பழியை தீர்க்க தான் ஆதித்ய கரிகாலனை வரச் சொல்லி இருப்பார். பேசிக் கொண்டிருக்கும் பொழுது நந்தினி இடும்பன் காரி ரவிதாசனுக்கு சிக்னல் கொடுப்பார் இதை தெரிந்து கொண்ட வந்திய தேவன் உடனடியாக ஆதித்ய கரிகாலனை காப்பாற்ற முயற்சி செய்வார் ஆனால் பழுவேட்டையர் அவரை தாக்கி மயக்கம் அடைய செய்து விடுவார்.
அப்பொழுது அந்த அறையில் இருந்து திடீரென ஒரு இருள் ஏற்பட்டு மீண்டும் வெளிச்சம் வரும் பொழுது ஆதித்ய கரிகாலன் இறந்து கிடப்பார் யார் கொன்னார் என்பது தெரியாமல் இது நடக்கும் ஆனால் கடைசியில் வந்திய தேவன் மீது இந்த பழியை போட்டு விடுவார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்ய கரிகாலனை யார் கொன்றது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக சொல்லப்பட்டு இருக்காது.
ஆனால் ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டது குறித்து உடையார் புடி கல்வெட்டியில் சில குறிப்பிடுகள் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் ரவிதாசன், சோமன், பரமேஸ்வரன் ஆகியோர்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்று இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி சந்தேகத்தின் பெயரில் அவர்களுக்கு தண்டனை வழங்கி இருப்பார் அந்த தண்டனை என்னவென்றால் அவர்களது சொத்துக்களை அனாதைக்கு கொடுத்த விட வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது இதை மணிரத்தினம் எப்படி எடுத்துக் கொண்டு போய் இருப்பார் என்பது தான் தெரியவில்லை பொறுத்திருந்துதான்பார்க்க வேண்டும்.