Leo : லோகேஷ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் “லியோ” பல தடைகளை தகர்த்து எறிந்து அக்டோபர் 19ஆம் தேதி நேற்று கோளாக்காலமாக உலகம் எங்கும் ரிலீசானது. படத்தின் கதை என்னவென்றால்.. ஆண்டனி தாஸ் மற்றும் ஹரால்டு தாஸ் என அண்ணன் தம்பிகள் இருக்கின்றனர்.
ஆண்டனி தாஸ்க்கு லியோ தாஸ் என்ற மகனும், ஒரு மகள் இருக்கிறார். சில காரணங்களால் பெத்த மகளையே ஆண்டனி தாஸ் கொள்கிறார். இதனால் கோபம் கொண்ட லியோ தாஸ் சண்டை போடுகிறார் அவரையும் துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர். அங்கு இருப்பவர்கள் லியோதாஸ் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து போய் விடுகின்றனர்.
லியோ படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா.? அடேங்கப்பா இத்தனை சர்ப்ரைஸா.! ஆனாலும் த்ரிஷா பின்னிடிங்க
பிறகு காஷ்மீரில் பார்த்திபன் என்ற நபர் பிரபலம் அடைகிறார் அவர் பார்ப்பதற்கு லியோ தாஸ் போலவே இருப்பதால் ஆண்டனி தாஸ், ஹரால்டு தாஸ் இருவரும் சந்தேகப்பட்டு ஆட்களை அனுப்புகின்றனர் ஆனால் அந்த பார்த்திபன் நான் லியோ தாஸ் கிடையாது என போராடுகிறார். பின்பு சண்டை நடக்கிறது ஒரு வழியாக அந்த சண்டையில் அனைத்து ஆட்களையும் கொன்று விடுகிறார்.
கடைசியில் ஆண்டனி தாஸ் மற்றும் ஹரால்டு தாஸ் – க்கு நான்தான் லியோ தாஸ் சொல்லி கொலை பண்ணுகிறார். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சஸ்பென்சாக இருந்தாலும் இரண்டாவது பாதி சொல்லும்படி இல்லாதது மற்றும் கிளைமாக்ஸ் சீன் அந்த அளவுக்கு இல்லை இதனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
சினிமா விமர்சர்கள் பலரும் லியோ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர் அப்படி ப்ளூ சட்டை மாறனும் படத்தை பார்த்து விட்டு விமர்சித்தார். முதல் பாதியை ஓகே தான் ஆனால் இரண்டாவது பாதி சரியில்லை என கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இதுவரை ஐந்து படங்களை இயக்கி உள்ள நிலையில் அவரது நிலை கழுதை தேய்ந்து கட்டறும்பு ஆனா கதையாக மாறி உள்ளது.
என விமர்சித்தார். லியோ படத்தில் வில்லன் கேரக்டர் ஸ்ட்ராங்காக இல்லை என்பதை சுட்டிக்காட்டி LCU என்ற பெயரில் கமல் பேசுவதெல்லாம் காமெடியாக இருந்ததாக கூறினார். மற்றொரு பதிவில் லியோ படத்தில் ஃபேவரட் காமெடி நடிகர் குறித்த கருத்து மேற்கொண்டு இருந்தார்.
அதில் சந்தோஷ் குமார் என்னும் சாண்டி மாஸ்டர், அனுராக் காஷ்யப், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத்தை இணைத்துள்ளார் இவர்களில் யார் லியோ படத்தின் சிறந்த காமெடி நடிகர் என கேள்வி எழுப்பினார். இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.