பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தான்.? வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

bb
bb

சமீபகாலமாக கொரோனா காலகட்டத்தினால் பல திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அப்படி ஓடிடி தளங்களில் ஒன்றான ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் லைவாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸில் கலந்து கொண்ட சில முக்கிய போட்டியாளர்கள் கலந்துகொண்டு பயணித்தனர். ஆரம்பத்தில் 14 போட்டியாளர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொடங்கி வைத்தார் எனினும் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியாகிய நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் பைனல்சை  நெருங்கியுள்ளது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸ் இன்று ஒளிபரப்பாக உள்ளது. அதில் பல தடைகளை தாண்டி மக்களின் வாக்குகளின் படி பைனல்ஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், பாலாஜி முருகதாஸ், நிரூப் மற்றும் தாமரைச்செல்வி ஆகிய நான்கு போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த நான்கு பைனலிஸ்டில் யார் வெற்றி பெறுவார் என பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இறுதி வாரத்தில் பைனன்ஸ் போட்டியாளர்களுடன் பிக்பாஸ் முந்தைய போட்டியாளர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்துக்கொண்டனர். அப்படி பிக் பாஸ் அல்டிமேட்டில்  ஹன்சிகா மற்றும் முகின் ராவ் அவர்களது படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் இல் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று பாலாஜி முருகதாஸ் முதலிடத்தை பிடித்து உள்ளார் அவரை தொடர்ந்து முதல் ரன்னர் அப் நிரூப் மற்றும் இரண்டாவது ரன்னர் அப் ரம்யா பாண்டியன் மற்றும் 4வது இடத்தை தாமரைச்செல்வி பிடித்துள்ளார்.