தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இப்போது தனது 65வது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வேற ஒரு லெவலில் எடுத்து வருகிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.
சும்மாவே சூப்பரான படங்களை கொடுத்த நெல்சன் திலீப் குமாருக்கு இந்த திரைப்படம் முக்கிய படம் என்பதால் ஒவ்வொரு சீனையும் சிறப்பாக செய்கிறார் அதற்கு உறுதுணையாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் உதவுகிறது. படக்குழு ஏற்கனவே பூஜா ஹெக்டே விஜய் ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சண்டைக்காட்சிகள் உருவாக உள்ளன.
இதற்காக வில்லன்களை சமீபத்தில் படக்குழு தேர்ந்தெடுத்து வருகிறது அந்த வகையில் முதல் ஆளாக செல்வராகவனை நேற்று அதிகாரப்பூர்வமாக கமிட் செய்தது. முதல் வில்லனாக செல்வராகவன் களம் இறங்கி உள்ளார். அடுத்ததாக கேரள நடிகரான Shine tom chacko என்பவர் இரண்டாவதாக நடிக்க உள்ளார்.
இருவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வில்லன் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எகிற வைத்துள்ளது அந்த வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த டான்சிங் ரோஸ் “சபீர்” மூன்றாவது வில்லனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது காரணம்பீஸ்ட் படத்தின் ஆடிசன்களில் அவர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே அவரை படக்குழுவினர் வாய்ப்புகள் கொடுக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் காத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவரை இந்த படத்தில் இணைந்துவிட்டால் கூடுதல் பலமாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.