உலகநாயகன் கமலஹாசன் சினிமாவை சமீபகாலமாக ஒதுக்கிவிட்டு தயாரிப்பு நிறுவனம் வியாபாரம் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்துப் போகவே உடனடியாக படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது ஒருவழியாக படம் எடுக்கப்பட்டு வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.
விக்ரம் படத்தில் கமலுடன் சேர்ந்து நரேன், பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளது. தொடர்ந்து விக்ரம் படத்தில் இருந்து அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது குறிப்பாக வில்லன்களை பற்றிதான் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துள்ளன அந்த வகையில் நடிகர் சூர்யா.
இந்தப் படத்தில் கடைசி பத்து நிமிட காட்சிகளில் வந்து போது அந்த பத்து நிமிட காட்சிகளும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் அதே சமயம் விக்ரம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் கமல் குறித்தும் பேசி வருகின்றனர் கமல் வழக்கம் போல தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார்.
நிச்சயம் அவரது சினிமா பயணத்தில் விக்ரம் திரைப்படம் ஒரு புதிய சாதனை படைக்கும் எனவும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் டிரைலர் பற்றி பேசியுள்ளனர் மிக சிறப்பாக இருக்கிறது குறிப்பாக கமல் அவரது காட்சிகளில் சம்பவம் செய்துள்ளார் இந்த டிரைலரில் ஒரு காட்சியில் ***தா பாத்துக்கலாம் என கமல் ஒரு சீனில் பேசியிருப்பார்.
இதுகுறித்து பேட்டியில் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் சொன்னது. அந்த வசனம் முதலில் பேப்பரில் இல்லை. வீர வசனம் தான் இருந்தது அன்று சூட்டிங் ஸ்பாட்டில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது உதவி இயக்குனர் என்னிடம் வந்து என்ன செய்வது என கேட்டார் நான் பார்த்துக்கலாம் டா என்றேன் அது நன்றாக இருந்தது.
இந்த வசனத்தை கமல் சாரிடம் சொல்லி இருந்தேன் அதேசமயம் இந்த வசனத்தை நீங்கள் விருமாண்டியாக அல்லது மைக்கேல்லாக சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டேன் கமலும் சும்மா அசால்டா அதை பேசி முடித்தார் என கூறினார்.