ஒரு நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து அவரது ரசிகர்கள் அவரை சந்தோஷப்படுத்துவார்கள் ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்தால் அந்த ரசிகர்களே ஒருகட்டத்தில் கடுப்பாகி அந்த ஹீரோவிடம் நீங்கள் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்தால் சூப்பராக இருக்கும் என கேட்கும் அளவிற்கு போய்விடும்.
அதை சினிமா உலகில் நன்கு புரிந்து கொண்ட விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திலையும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் நடிகர் விக்ரமுக்கு தொடர்ந்து சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மேலும் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்துள்ளதால் இந்திய அளவில் கவனிக்கப்படும் கூடிய நடிகர்களில் ஒருவராக விக்ரம் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் சீயான் 60, கோப்ரா மற்றும் பொன்னின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் விக்ரம் கையில் இருக்கிறது.
இவை அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் விக்ரமுக்கு மலையூர் மம்முட்டியான் பட நடிகர் தியாகராஜன் விக்ரமுக்கு மாமாவுக்கு என தெரியவந்துள்ளது அப்படிப் பார்த்தால் டாப் ஸ்டார் பிரசாந்த் விக்ரமுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை ரசிகர்கள் சமூக வளை தளப்பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.