சினிமாவில் இருப்பவர்கள் எப்பொழுதும் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்க காரணம் ஏதாவது ஒரு வகையில் சினிமாவில் பிரபலங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது தான் உண்மை. அதை சரியாக செய்து வருபவர்தான் எஸ் ஜே சூர்யா.
சினிமா ஆரம்பத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்த எஸ். ஜே. சூர்யா ஆரம்பத்தில் அஜித்தின் வாலி, விஜய்யின் குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதைத் தொடர்ந்து சினிமாவில் இவர் இயக்குனராக சிறப்பான ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் தோல்வியை சந்திக்க ஒரு கட்டத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.
அதிலும் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தாலும் தொடர்ந்து போராடி வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் ஆரம்பத்தில் தயங்கி தான் நடித்தார். அது அவருக்கு பேரும், புகழையும் பெற்று தந்தன. அதை சரியாக பிடித்து படிப்படியாக முன்னேறி உள்ளார். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் இவர் நடிக்கின்ற சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்தன.
அந்த வகையில் ஹீரோவாக கடைசியாக நடித்த மான்ஸ்டர், நெஞ்சம்மறப்பதில்லை போன்ற படங்களில் இவரது நடிப்பு அசாதாரணமாக இருந்தது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியை தொடர்ந்து எஸ். ஜே. சூர்யாவும் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகின மேலும் அந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற சில வதந்திகள் வெளியாகின அதை விசாரித்து பார்க்கும்போதுதான் தெரிகிறது அப்படி ஒன்றும் இல்லை எஸ்.ஜே. சூர்யா தற்போது சினிமா உலகில் ஹீரோ வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காட்டி உள்ளார் என்று தெரிய வருகிறது.
ஆனால் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அந்த படம் மிரட்டலாக இருக்கும் எனவும் ஒரு பக்கம் ரசிகர்கள் கூறுகின்றனர்.