“சூப்பர் டீலக்ஸ்” படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா.?

ramya-krishanan-
ramya-krishanan-

80 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் ஹீரோயின்னாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லியாகவும் தமிழ் சினிமாவில் நடித்து அசத்தி வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்திலுமே இவரது நடிப்பு வேற லெவல் இருந்தது.

பாகுபலி 1, 2 மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் வியக்க வைக்கும் வகையில் இருந்தது. இப்போது கூட பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக இவர் இருக்கிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் இவர்களுடன் இணைந்து பகத் பாசில், மிஷ்கின், விஜய் சேதுபதி, சமந்தா, காயத்திரி மற்றும் பல நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி இருந்தனர்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை  ஆரண்ய காண்டம் படத்தை எடுத்த தியாகராஜன் குமாரராஜா என்பவர் 8 வருடங்கள் கழித்து விஜய் சேதுபதி ஹீரோவாக வைத்து எடுத்த திரைப்படம்தான் சூப்பர் டயலாக்ஸ் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியது இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரமும் வியக்க வைக்கும் வகையில் இருந்தது உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க வேறு ஒரு பிரபல நடிகையை தேர்வு செய்து இருந்தது.

அந்த நடிகை வேறுயாருமல்ல நடிகை நதியா தான் அவரும் முதலில் படத்தில் கமிட்டாகி ஒரு காட்சியில் நடித்துவிட்டு பின் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார் அதன்பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது பின் அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடதக்கது.