சந்திரமுகி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் தெரியுமா.? அவரும் மலையாள நடிகை தான்.

santhiramugi

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்திலிருந்து தற்போது வரைக்கும் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்து உள்ளதோடு மட்டுமல்லாமல் விமர்சனத்தையும் நல்ல விதமாகவே பெற்று இருக்கிறது.

அது போல 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தியதோடு விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த காரணத்தினால் இந்த திரைப்படம் நீண்ட நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஜினி கேரியரில் இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல், நாசர் போன்ற பலர் நடித்து இருந்தனர். ரஜினி போல ஒவ்வொருவரும் முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களையும் நன்றாகவே கவர்ந்து இழுத்தது.

இந்த திரைப்படம் எப்பொழுதும் மக்களுக்கு பிடித்த படமாக இருந்து வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சந்திரமுகி படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் தான் முதலில் கமிட்டாகி இருந்தார் அந்த நடிகை கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

navya nair
navya nair

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்திய நவ்யாநாயர் தான் நயன்தாராக்கு பதிலாக முதலில் நடிகை இருந்தாராம் ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் நயன்தாராவை படக்குழு தட்டி தூக்கியது .