கமலஹாசன் நடிப்பில் மிரட்டிய “நாயகன்” படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த பிரபலம் யார் தெரியுமா.?

nayakan
nayakan

உலகநாயகன் கமலஹாசன் 80 கால கட்டங்களிலிருந்து இப்போ வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்பகூட இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் விக்ரம். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது.

இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில் விஜய் சேதுபதி ஷிவானி நாராயணன் நரேன் விஜே மகேஸ்வரி பிரபல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வெற்றிகரமாக முடித்த கையோடு அடுத்ததாக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் கமல்.

இதனால் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை கமல் வெற்றிகரமாக பயணித்து போய்க்கொண்டிருக்கிறார். உலகநாயகன் கமலஹாசன்  சினிமாவையும் தாண்டி தற்போது பல்வேறு விஷயங்களை செய்து வருகிறாராம் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார் அதோடு மட்டுமல்ல அமெரிக்காவில் கதர் ஆடை நிறுவனம் ஒன்றையும் துவங்கி இருக்கிறாராம்.

இந்த வயதிலேயே யும்  தன்னால் முடிந்தவற்றை செய்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் நாயகன். இந்த படத்தை  மணிரத்தினம் எடுத்து இருந்தார். இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன், நாசர் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தியிருக்கிறார்.

இவர் படத்தில் நடிகர் நாசர் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார் அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இயக்குனர் மணிரத்னம் நடிப்பிற்கு  பெயர்ப்போன ரகுவரனை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தார். ஆனால் நடிகர் ரகுவரன் கைவிடவே பின் நாசருக்கு இந்த ரோல் கிடைத்ததாம்.