விஷால் மிரட்டிய “சண்டக்கோழி” படத்தில் ஹீரோயின்னாக முதலில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா.? அப்புறம் தான் மீராஜாஸ்மின்.

sandakozhi
sandakozhi

தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் லிங்குசாமி.  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷாலை வைத்து இயக்குனர் லிங்குசாமி எடுத்த திரைப்படம் சண்டக்கோழி. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போட்டது.

அந்த அளவிற்கு படம் விறுவிறுப்பாகவும் காமெடி,சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த திரைப்படமாக இருந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது. மேலும் மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று நீண்ட நாள் ஓடியது இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் இணைந்து லால், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ஜாஸ்மின் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தினார்.

முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேட்டுக்கொண்ட நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டது.

ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாவது பாகம் இல்லாததால் ரசிகர்கள் மத்தியில் சண்டக்கோழி இரண்டாம் பாகம் வெற்றியை பெற தவறியது இந்த நிலையில் சண்டக்கோழி முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை தான் நடிக்க வைக்க தேர்வு செய்ததாகவும் அந்த பிரபல நடிகை வேறுயாருமல்ல..

ஹிந்தியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தீபிகா படுகோன் தான் படக்குழு அவருக்கு சொல்ல இந்த கதை பிடித்து இருந்தாலும் அவர் கேட்ட சம்பளம் படக்குழுவை ஆச்சரியப்படுத்தியது இத்தனை அடுத்து லிங்குசாமி மறுத்து விட்டு பின் நடிகை மீரா ஜாஸ்மின் இப்படத்தில் கமிட் செய்தாராம் அவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது