தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித்குமார். இவரது படங்கள் வெற்றி தோல்வி அடைந்தாலும் ரசிகர்கள் மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். அஜித்தும் ரசிகர்களுக்காக தொடர்ந்து ஆக்சன் மற்றும் சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து சந்தோஷப்படுத்தி தான் வருகிறார்.
வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹச். வினோத்துடன் இணைந்து தனது 60வது திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. AK 61 இப்படத்தில் அஜித்துடன் இணைந்து சமுத்திரக்கனி, வீரா, JOHN KOKKEN, மஞ்சு வாரியர் மற்றும் பல அட்டாக் நடிகர் நடிகைகள் நடித்தது வந்து கொண்டிருக்கின்றனர்.
AK 61 வருகின்ற தீபாவளிக்கு வெளியிட படக்குழு முனைப்புக்காட்டி வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தை வைத்து படத்தை இயக்கிய பல சினிமா பிரபலங்கள் இப்பொழுது அஜித்தை பற்றி பேட்டி கொடுத்து வருகின்றனர் அப்படி அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனரும் நடிகருமான பேரரசு அஜித்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கினார்.
இந்தப்படம் வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்று அசத்தியது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து சதா மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர். அண்மையில் பேட்டி ஒன்றில் திருப்பதி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சதா நடித்திருப்பார் ஆனால் முதலில் நாங்கள் தேர்வு செய்தது வேறு ஒரு நடிகை தான் என கூறினார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல நயன்தாரா தான். அஜித்துடன் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தோம் ஆனால் நயன்தாரா தொடர்ந்து தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் அப்பொழுது நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்தார்.