விஜயகாந்த்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான சின்னகவுண்டர் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா..?

cinna-coundar-1

பொதுவாக தமிழ் சினிமாவில் மக்கள் நலன் கருதியும் சமூக நலன் கருதியும் திரைப்படம் நடிப்பதில் மிகச்சிறந்த நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தது மட்டுமல்லாமல் தற்போது பிரபல கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் என்ற திரைப்படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் சுகன்யா கவுண்டமணி மனோரமா செந்தில் வடிவேலு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

இளையராஜாவின் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் ஆனது மாபெரும் ஹிட்டு கொடுத்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது அதுமட்டுமில்லாமல் அந்த காலத்திலே சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

chinna coundar-01
chinna coundar-01

இப்படி புகழ் வாய்ந்த இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடக்கவிருந்தது விஜயகாந்த் இல்லையாம் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்க இருந்தார் ஆனால் ரஜினிகாந்திற்கு கால்ஷீட் பிரச்சினை இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.

பின்னர் தான் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார் ஆனால் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த பிறகு  நல்ல ஹிட் கொடுத்து விட்டது. ஆனால் இந்த திரைப்படத்திற்கு மிகவும் பொருத்தமான கதாபாத்திரம் என்றால் அது விஜயகாந்திற்கு தான் அமையும் ரஜினி நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா என்றால் அது சந்தேகம்தான்.

rajinikanth-01