சீரியல் நடிகை “சைத்ரா ரெட்டிக்கு” மிகவும் பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

saithra-reddy
saithra-reddy

சின்னத்திரை நாயகிகள் பலரும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் சீரியல் நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் டேரக்டாக செல்ல முடியாத காரணத்தினால் சீரியலில் நடித்து இதன் மூலம் பாப்புலராகி பின்பு வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பல சின்னத்திரை நடிகைகளும் பட வாய்ப்பு காரணமாக சீரியலை பாதியில் விட்டுவிட்டு சென்று விடுகின்றன. மேலும் சீரியல் நடிகைகளில் மக்களின் ஃபேவரட்  நடிகைகளில் ஒருவர் சைத்ரா ரெட்டி. இவர்  ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவருக்கு அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இடையில் நிஜ வாழ்க்கையில் திருமணமாகியது. பின்பு அவர் நடிப்பாரா மாட்டாரா என யோசித்தபோது தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்தார் மேலும் அவர் அந்த சீரியல் முடிந்ததும் பின்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த தொடர் வந்த கொஞ்ச நாட்களிலே மக்களிடையே நல்ல  ரீச் அடைந்து டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகிறது. மேலும் இவர் தற்போது அஜித் நடிப்பில் உருவாகி திரையரங்கிற்கு வர ரெடியாக உள்ள வலிமை திரைப்படத்திலும் சைத்ரா ரெட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அண்மையில் இவர் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் உரையாடியபோது ரசிகர் ஒருவர்.

இவரிடம் அஜித், விஜய், சூர்யா இவர்கள் மூவரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என கேட்டுள்ளார் அதற்கு சைத்ரா ஒவ்வொருவருக்கும் தனித்தனி நல்ல குணம் இருக்கின்றன.  அதில் நான் அஜித்  அவர்களை நேரில் சந்தித்து உள்ளேன். அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல மனிதர் அவரை நான் பார்த்து உள்ளதால் அவர் போல் இருக்க ஆசைப்படுகிறேன்  என்று கூறினார்.