KGF பட ஹீரோயின் “ஸ்ரீநிதி ரெட்டி” பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

KGF-
KGF-

அதளபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை தூக்கி நிறுத்தியவர் இயக்குனர் பிரசாந்த் நீல் தான். இவர்  நடிகர் யாஷை வைத்து இரண்டு படங்களை இயக்கி உள்ளார் அந்த இரண்டு படங்களுமே கன்னட சினிமாவையும் தாண்டி உலக அளவில் பேசப்பட்டு வருகிறது இதனால் கன்னட சினிமாவும் மற்ற மொழி சினிமாவுக்கு நிகராக நிற்கிறது அதற்கு முழுக்க முழுக்க காரணம் இவர்தான்.

பிரசாந்த் எடுத்த கேஜிஎப் மற்றும் கே ஜி எஃப் 2  ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கே ஜி எஃப் முதல் பாகம் சிறப்பாக இருந்த காரணத்தினால்  இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது இருப்பினும் பல்வேறு தடைகளை சந்தித்ததால் படக்குழு இரண்டு வருடம் கழித்து ஒரு வழியாக ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்தது.

முதல் பாகத்தை விட இந்த படத்தில் பல மடங்கு மாஸ் சீன்கள் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்ததால் முதல் படத்தைவிட இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது அதன் காரணமாக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது.

கேஜிஎப் 2 வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து போய்க்கொண்டிருக்கிறது இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இதன் மூலம் பாகுபலி மற்றும் RRR ஆகிய படங்களின் வசூலை முறியடிக்க ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் யாஷ் ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் மற்றும் மாஸ் சீன்களில் மிரட்டினார்.

அதேபோல நடிகை ஹீரோயின் ஸ்ரீநிதி ரெட்டி தனது திமிரும் பேச்சு மற்றும் சென்டிமென்ட் சீன்கள், ரொமாணடிக் போன்றவற்றில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்னாக மாறி உள்ளார் இதுவரை அவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் தற்போது தான் இவர் தமிழில் விக்ரமுடன் கைகோர்க்கும் கோப்ரா படத்தில் அவருக்கு தமிழில் முதன்முறையாக நடித்துள்ளார் இது அவருக்கு மூன்றாவது திரைப்படம் ஆகும்.

சினிமாவில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் மாடல் அழகியாக இருந்து பல பட்டங்களைப் பெற்றுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ரீநிதி ரெட்டி சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அப்பொழுது விஜயின் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு விஜய்யின் மாஸ்டர், பிகில் பிற படங்களைப் பார்த்து உள்ளேன் ஆனால் தற்போது கே ஜி எஃப் 2 படத்தின் புரமோஷனுக்காக சுற்றி வருவதால் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்க முடியவில்லை என கூறி உள்ளார் ஆனால் நிச்சயம் பார்ப்பேன் எனக்கு பிடித்த நடிகரும் அவர் தன் எனவும் கூறியுள்ளார்.