“பீஸ்ட்” பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.? விஜய் கிடையாது.?

pooja-hegde-
pooja-hegde-

தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து ஓடி கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. சினிமா உலகில் பொதுவாக ஒரு நடிகை கிளாமர் மற்றும் தனது திறமையை காட்ட வேண்டியது அவசியம் அப்படிக் காட்டினால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

அதே சமயம் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அதை நன்கு புரிந்து கொண்டே தற்போது தென்னிந்திய சினிமா உலகின் டாப் நடிகர்களுடன் இணைந்து வெற்றிகளை குவித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகை பூஜா ஹெக்டே விஜயுடன் கைகோர்த்து  பீஸ்ட் என்னும் படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருடன் கைகோர்த்த யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாகும் என வழங்கப்படுகிறது.

தமிழில் இதற்கு முன்பாக நடிகை பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானவர் என்பது குறிப்பிடதக்கது ஆனால் அந்தப் படம் மிகப்பெரிய ஒரு தோல்வியை தழுவிய நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் நடித்து உள்ளதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்குகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில்  நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்பது பற்றியும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகை பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கமலின் விஸ்வரூபம் படம் குறித்து சில பதிவுகளை போட்டுள்ளார் இதோ நீங்களே பாருங்கள் அதை வைத்து பார்க்கும்போது தெரிகிறது. நடிகை பூஜா ஹெக்டே  நடிகர் கமலின் தீவிர ரசிகை என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது.