பிரபுதேவாவின் நடிப்பு திறமையை பார்த்து 500 ரூபாய் பணம் கொடுத்த பிரபல இயக்குனர் -யார் அது தெரியுமா.?

prabhu deva
prabhu deva

தமிழ் சினிமாவில் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு இப்பவும் தவிர்க்கமுடியாத நாயகனாக ஓடிய கொண்டிருப்பவர் பிரபுதேவா. அந்த வகையில் தமிழ் நடன இயக்குனராகவும், பட இயக்குனராகும், ஹீரோவாகவும் வலம் வருகிறார் இப்பொழுது கூட இவரது நடிப்பில் பொன்மாணிக்கவேல் என்ற படம் வெளியாகியது.

அதனை தொடர்ந்து பஹீரா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் பிரபுதேவா குறித்து சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மௌனம் ராகம் படத்தில் பிரபுதேவா ஒரு சிறு காட்சியில் நடித்து அசத்தியிருப்பார் பிரபுதேவா சிறுவயது முதலே பரதநாட்டியம் பயிற்சி பெற்றவர் இதனால் பள்ளிப் பருவத்திலேயே அவருடைய தந்தை சுந்தரம் அவருடன் ஷூட்டிங் போக ஆரம்பித்தார்.

அப்படி ஒரு தடவை சுந்தரம் மாஸ்டர் ஊட்டிக்கு போகும்போது மௌனராகம் சூட்டிங் நடந்தது. இந்த நிலையில் மணிரத்தினம் தோட்டா தரணி பிவி ராம் ஆகியோர்கள் பிரபுதேவாவை நடனமாடிய சொல்லி உள்ளனர் இதனையடுத்து பிரபுதேவாவும் நடனத்தில் அசத்த மௌன ராகம் படத்தில் பனிவிழும் இரவு நனைந்தது நிலவு என்ற பாடலில் பிரபு தேவா ப்ளூட் வாசிக்கிற மாதிரி ஒரு இரண்டு காட்சிகளில் நடிக்க மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த பாடலின் நடந்ததை பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர் கூறி கோரியோகிராஃப் செய்தாராம். இவரது திறமையை அப்பொழுது இயக்குனர் மணிரத்தினம் பார்த்து அசந்து போனாராம் மேலும் அவரை அழைத்து 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார். மேலும் பிரபுதேவா அந்த 500 ரூபாய் பணத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடிகை ரேவதி கொடுத்த  மாத்திரை பெரிதாக நண்பர்களுடன் சொல்லி சந்தோஷப்பட்டார்.