தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணித்து வருவர் கே எஸ் ரவிகுமார். இவர் கமல், ரஜினி, அஜித் போன்ற பல்வேறு டாப் நடிகர்களுக்கு பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது படங்கள் எந்த படத்தின் சாயலும் இல்லாமல் இருந்து வந்துள்ளதால் அனைத்துமே மெகா ஹிட்டாகி உள்ளன.
அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பஞ்சதந்திரம். இந்த படத்தில் கமல் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் கதையும் உயிர் கொடுத்து இருப்பார் அந்த அளவிற்கு பிரமாதமாக நடித்து அசத்தி இருந்தார்.
இந்தப் படத்தில் அவருடன் கைகோர்த்து ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, ரமேஷ், அரவிந்த், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ஊர்வசி, நாகேஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து அசத்தியிருப்பார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இந்த படம் கமலின் சினிமா கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நண்பராக யூகிசேது நடித்திருப்பார் அந்த கதாபாத்திரம் மிகவும் நகைச்சுவையான கதாபாத்திரமாக அமைந்திருக்கும்.
உண்மையில் அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது இவர் கிடையாதாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சீக்கா என்னும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தான் நடிக்க இருந்தாராம் அப்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கொஞ்சம் பதட்டமாக இருந்த காரணத்தினால் அவருக்கு பதில் யூகி சேது சிறப்பாக நடித்து அசத்தினாராம்.