கடந்த சில வருடங்களாக டாப் நடிகர்கள் படங்கள் சோலோவாக இறக்கி வருகின்றனர் இருப்பினும் சில எதிர்பாராத காரணங்களால் படங்கள் நேருக்கு நேர் மோதுவது வழக்கம் அப்படி கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் கிளாஸ் ஆகின.
இதில் விஜய் கை தான் ஓங்கும் என பலரும் கூறினர் ஆனால் படம் வெளிவந்து அதற்கு எதிர் மறந்தது. அஜித்தின் துணிவு திரைப்படம் இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இழுத்து வெற்றிகரமாக ஓடியது மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது இருப்பினும் இரண்டு திரை படங்களுக்கான வசூல் அதிகரித்த வண்ணமே காணப்பட்டது.
இப்பொழுது இரண்டு திரைப்படங்களும் 25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் துணிவு திரைப்படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை எந்த திரைப்படம் அதிகம் வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளன அதன்படி பார்க்கையில் அஜித்தின் துணிவு திரைப்படம்.
தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் அள்ளியது உலக அளவில் 250 கோடி வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கு மேல் அள்ளி இருந்தாலும் ஓவர் ஆள் பார்க்கும் போது 290 கோடி வசூல் அள்ளி இருக்கிறது.
தமிழகத்தில் அஜித்துக்கு கிங் என்றால் உலக அளவில் விஜயின் வாரிசு தான் அதிக வசூலை அள்ளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற நாட்களில் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..