சிவகார்த்திகேயனின் அம்மா,அக்கா யார்.? என்ன செய்கிறார்கள் தெரியுமா.? புகைப்படம் இதோ.

siva

மீடியோ உலகில் பல கஷ்டங்களை சந்தித்து பின்னாட்களில் வெள்ளித்திரையில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக வளர தொடங்கி உள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் மெரினா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

இதனை தொடர்ந்து அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறுவார் என யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு அடுத்தடுத்த படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அசத்தினார் மேலும் அத்தகைய படங்கள் நல்ல வசூலை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு நல்ல பெயரையும் எடுத்தார்.

சிவகார்த்திகேயன்சினிமா உலகில் தக்கவைத்து கொள்ள தற்போது அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.சமிபத்தில் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் தனது சகோதரியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பல சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் சிவகார்த்திகேயன்  அப்பொழுது அவர் கூறியது.

என் அக்கா பெயர் கௌரி என் மீது ரொம்ப பாசம் கொண்டவர். அவர் பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்கினாயதால் அக்காவுக்கு டாக்டர் படிக்கணும்னு ஆசை ஆனா பிளஸ் டூவில் நல்ல மார்க் கிடைத்தாலும் நுழைவுத் தேர்வில்  மூன்று மார்க்  கம்மியாக இருந்தது. அப்பொழுது என் அப்பா அதை எல்லாம் பரவாயில்லை அம்மா 15லட்சம் பணம் கட்டியாவது எப்படியாவது சீட்டு வாங்கி விடலாம் என கூறிய கடனை வாங்கி எடுத்துக்கொண்டு காலேஜுக்கு போனோம்.

இன்னும் ரெண்டு நிமிஷத்துல அந்த பணத்தை காலேஜ்ல கட்டியிருக்கும் அப்பொழுது என் அக்கா வந்து எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க அப்பா நான் இந்த தடவை எழுதி நிச்சயம் பாஸ் ஆகி சீட்டு வாங்கி விடலாம் என்று சொன்னார் சரி என்று சொல்லி பணத்தை கட்டாமல் நாங்கள் வந்துவிட்டோம். பிறகு என் அக்கா என்றன்ஸ் எக்ஸம் எழுதினாங்க சீட்டு கிடைத்தது.

அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே எனது அப்பா வாழ்ந்தார் அதன் பிறகு அவர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அக்கா அப்படி அன்னைக்கு முடிவு பண்ணாம இருந்தா நாங்கனா 15 இலட்சம் ரூபாய் அன்றைய காலகட்டத்திலேயே கடனாளியாக இருந்திருபோம் ஆனால் எனது அக்கா அன்னைக்கு துணிச்சலாக இந்த முடிவு எடுத்ததால் நாங்கள் பிழைத்தோம்.

அவர் எனக்கு அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு  ஒரு அம்மாவாகவும் இருந்து  என்னை நல்லா வளர்த்தாங்க என்  அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதையும், கௌரவத்தையும் என் அக்காவுக்கு கிடைக்கச் செய்தேன் என்று பெருமையுடன் சொன்னார். இதோ சிவகார்த்திகேயன் அக்கா மற்றும் அம்மா இருவரும் இருக்கும் புகைப்படம்.

siva akka
siva karthikeyan amma
siva karthikeyan amma