நடிகை ரேவதிக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

revathi
revathi

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகை ரேவதி 90 காலகட்டங்களில்  உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினி கமல் கார்த்திக் பிரபு போன்ற நடிகர்களுடன் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகை ரேவதி ஆண்பாவம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர். முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இதனை அடுத்த சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.  அதனால் இவரது சினிமா பயணம் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டது. மேலும் நடிகை ரேவதி  கேரியர்லில் மறக்க முடியாத ஒரு படமாக மாறியது தான் மௌனராகம் இந்தப் படத்தில் அவ்வளவு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்தில் கார்த்திக், மோகன் ஆகியோரும் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நடிகை ரேவதிக்கு இப்படி ஒரு சிறந்த படம் கிடைக்காமல் போனது ஒரு கட்டத்தில் வயது அதிகம் ஆக ஆரம்பித்தது வாய்ப்புகள் குறைய தொடங்கியது இப்போது தமிழ் சினிமாவில் அம்மா, சித்தி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ரேவதி டாப் நடிகர்கள் குறித்து பேசியுள்ளார்.

விஜயகாந்த் படப்பிடிப்பு தளத்தில் எப்பொழுதும் சாப்பாடு போடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதேசமயம் அவருடன் படத்தில் நடிப்பது ரொம்ப safe  இருக்கும் எனக் கூறினார் ரஜினியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படம் முள்ளும் மலரும் அதன் பின் சினிமாவில் ரஜினியின் வளர்ச்சியை நாளுக்கு நாள் அதிகம் ஆகியது அவர் ஒரு சிறந்த ஹீரோ இப்பொழுது அவரது  லெவெலில் மாறிவிட்டது என கூறினார்.

எனக்கு பிடித்த ஹீரோ யார் என்றால் அது கார்த்திதான் கார்த்திக்கும், நானும் ஒரே ஏஜ் உள்ளவர்கள் இருவரும் படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது எங்களுடைய கதைகளைப் படித்துப் பார்த்துவிட்டுத்தான் போட்டி போட்டுக் கொண்டு நான் நடிப்போம் ஆனால் அது படத்தில் தெரியாது. எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் கார்த்தி அவருக்கு பிடித்த நடிகை நான் தான் என கூறினார்.