உலகநாயகன் கமல் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு உருவாகிவரும் விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய்சேதுபதி, நரேன் மற்றும் சில சின்னத்திரை நடிகைகளான விஜே மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், மைனா நந்தினி போன்ற பலரும் இணைந்து உள்ளனர்.
இந்தப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். மேலும் சில வில்லன்களும் இந்தப்படத்தில் மிரட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலை போன்றவை நடைபெற்று வருகின்றன. படம் ஜூன் 3 ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.
விக்ரம் படத்தில் கமலஹாசன் இளமை கமல் ஆகவும் மற்றும் வயதான கமல் என இரு வேடங்களில் நடிக்க உள்ளாராம். சமீபத்தில் விக்ரம் பட போஸ்டர் கூட வெளியாகி மக்கள் மத்தியில் செம வைரல் ஆகியது. ஆக்ஷன் த்ரில்லர் என மாபெரும் லெவலில் வித்தியாசமாக உருவாகிவரும் விக்ரம் படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவட்சவா இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். பிளாஷ்பேக் காட்சியில் கமல் இளமையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதனால் அவருக்கு ஜோடியாக தான் ஷான்வி நடித்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் ஷான்வி கமலுக்கு ஜோடியாகவா அல்லது வேறு ஒரு முக்கிய ரோலிலா என உறுதியாக தெரியவில்லை.