சிம்புவின் “கொரோனா குமார்” படத்தில் வில்லனாக நடிக்கப் போவது இவரா.? மலையாள டாப் ஹீரோவாச்சே..

simbu
simbu

நடிகர் சிம்பு ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த இவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை சீக்கிரமாகவே பிடித்து விடுவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில பிரச்சனைகள்.

காரணமாக உடல் எடையை ஏற்றிக் கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் போனார். இதனால் அவரது சினிமா பயணமும் அதலபாதாளத்தில் கிடந்தது இவருக்குப் பின் வந்தவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாறினர் அதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட பின் தனது எண்ணங்களையும், உடலையும் குறைந்து தற்போது சிக்கன மாறி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

கடைசியாக மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் ஒருமுறை இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் இன்னும் குறைந்த நாட்களே இருக்கின்றன அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை சிறப்பாக நடிகர் சிம்புவும் மிகப்பெரிய அளவில் நடித்துக் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த திரைப்படத்தில் பல  முன்னணி டெக்னீஷியன்கள் பலர் பணி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் மக்களை கவரும் வகையில் திறமை வாய்ந்த பல டாப் நடிகர், நடிகைகளையும் வைக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில்  கொரோனா குமார் திரை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி வரும் மலையாள நடிகர் பகத் பாசிலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவிலேயே கொரோனா குமார் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரியவருகிறது.